Saturday, 22 August 2020

இந்தி திணிப்பு!

ஹிந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள்என்பது எந்தவிதத்தில் நியாயம்.குறைந்தபட்சம் அவர்களுக்கான தொழில்நுட்ப வசதியாவது  ஏற்படுத்தி தந்திருக்கவேண்டாமா?வெளியேறுங்கள் என்பதன் மூலம் எங்கள் மீதான உங்கள் அனுகுமுறை தான் என்ன?
                              பெரும்பான்மை மொழி பேசும் மக்கள்  சிறுபான்மை மொழி பேசும் மக்களிடம்  காட்டும் கனிவு இது தானா?
உங்கள் ஆதிக்க மனநிலையை எப்போது தான் மாற்றிக்கொள்வீர்கள்.
                         வங்கி படிவம் பூர்த்தி செய்ய இன்றும் எத்தனை பெண்கள் ஆண்கள் மற்றொருவரிடம் உதவி கேட்கிறார்கள் என்பது தெரியுமா உங்களுக்கு? அவர்கள் தாங்கள் படிவம் பூர்த்தி செய்ய இயலாமல் வங்கி ஊழியரிடம் சுயமரியாதை அற்று நிற்க கண்டிருக்கிறீர்களா?
                             இதற்கு எல்லாம் நீங்கள் தரும் தீர்வு இந்தி படியுங்கள்.இதற்கு பெயர் திணிப்பு அன்றி வேறே என்ன?மூன்று மொழி படிக்க சொல்லி எங்களை நிர்பந்திக்கிறீர்களே அவர்களுக்கு கூடதாலாக ஆங்கிலம் அளித்தால் குறைந்தா போவீர்கள்..நீங்கள் செய்ய மாட்டீர்கள் பெரும்பான்மை அரசியல் தானே உங்களை இப்படி செய்ய வைக்கிறது.
                                 உத்திரபிரதேசத்திற்கும் தமிழகத்திற்கும் சமமான மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்தால் நீங்கள் இதை செய்ய முடியுமா?இந்தியாவில் வாழும் அத்தனை மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் ஒன்றே தீர்வு

No comments:

Post a Comment